தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'கபாலி' படத்திற்கு முதன் முதலில் பெருமை சேர்த்த ஒன்றாக இருந்தது அந்தப் படத்தின் டீசர்தான். அந்த டீசரில் இடம் பிடித்த 'நெருப்புடா...' பாடல் ரசிகர்களிடம் உடனே பற்றிக் கொண்டது. ரஜினிக்காகவே எழுதப்பட்டது போன்ற அந்த வார்த்தை அவருடைய நடைக்கும், பார்வைக்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாக இருந்ததாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதுவரை ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த எத்தனையோ விதமான ஹீரோயிசப் பாடல்களில் 'நெருப்புடா...' ஒரு தனி ரகமாக அமைந்தது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய இந்தப் பாடல் டீசர் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாடல் வெளியான பிறகு அந்தப் பாடலை முழுவதுமாக ரசிப்பவர்களும் அதிகமானார்கள். படம் வெளியான சமயத்தில் அந்தப் பாடல் ஒலிக்காத இடங்களே இல்லை எனச் சொல்லலாம்.
இசை வெளியீடு நடந்ததும் யு டியுபில் ஜுன் மாதம் வெளியிடப்பட்ட 'நெருப்புடா...' பாடலின் லிரிக் வீடியோ 2 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஏற்கெனவே 'கபாலி' படத்தின் டீசர் 3 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ள நிலையில் தற்போது 'நெருப்புடா...' பாடலும் 2 கோடி சாதனையை எட்டியுள்ளது.