டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரெமோ படத்திற்காக “சிரிக்காதே” என்ற வீடியோ ஆல்பம் தயாராகி உள்ளது. இதனை பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். இவர்தான் ரெமோ படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜாவின் மூன்றாவது படத்தை நிவின்பாலி நடிப்பில் இயக்க இருக்கிறார்.
ஆல்பத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார், விக்னேஷ் சிவன் பாடலை எழுதியுள்ளார், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதி வெங்கடேஷ் பாடியுள்ளனர். ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத், கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், அர்ஜுன், ஆகியோர் தோன்றி ஆடியுள்ளனர்.
பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த வீடியோ ஆல்பம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஏற்கெனவே பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடித்தி அசர வைத்தவர்கள் இப்போது புரமோசன் ஆல்பம் மூலமும் மிரட்ட இருக்கிறார்களாம். படத்தின் பட்ஜெட்டில் 25 சதவிகிதத்தை விளம்பரத்துக்கென்று ஒதுக்கியிருக்கிறாராம் தயாரிப்பாளர்.