Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நா.முத்துக்குமாரின் தம்பி ரமேஷ்குமாரின் உருக்கமான வேண்டுகோள்....!

17 ஆக, 2016 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Na-Muthukumars-Brother-request

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கவிஞர்களில் நா.முத்துக்குமாரும் ஒருவர். உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமையன்று தனது 41வது வயதிலேயே மரணமடைந்தார். மனைவி, 8 வயது மகன், 8 மாத பெண் குழந்தை.... என அனைவரையும் தவிக்க விட்டு சென்றுவிட்டார். நா.முத்துக்குமாரை பற்றி பலவிதமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.


குறிப்பாக மஞ்சள் காமாலை நோய் தாக்கி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனதால்தான் அவர் மரணமடைந்தார் என செய்திகள் வெளியாகின. அதற்குரிய முழுமையான சிகிச்சைக்காக முத்துக்குமாருக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதாகவும், அவ்வளவு பெரிய தொகையை அவரால் செலுத்த முடியாத காரணத்தால் அவர் மரணத்தைத் தழுவ நேர்ந்தது என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக உட்பட பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நா.முத்துக்குமாரின் தம்பி ரமேஷ்குமார் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...


ஆம் நண்பர்களே... அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் பாவம் தாயில்லாப் பிள்ளைகள்... என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்...


அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. உங்கள் அனைவரது நோக்கமும், எங்களுக்கு உதவ வேண்டும் என்கிற நினைப்பும், என் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அவன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது.


சினிமாவை எவ்வளவு நேசித்தானோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்தான். கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவன் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.


ஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது. எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தது.


எங்களது தந்தை எங்களை பழக்கியதுப் போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே வளர்த்திருக்கிறோம். எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறான். கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி என கேட்டால் எந்த நிலையிலும் தட்டாமல் உதவி செய்வது என்கிற ஒன்றையே இறக்கும் வரையில் கடைப்பிடித்தவன் அவன். செய்திகளில் வருகிற பல கதை சொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தவறவிட்டதே கிடையாது. அவனது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன். அவனது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை தரையில் தான் வைத்திருந்தோம். தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையை தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம்.


இழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பே இந்தக் கடிதம்.


ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, தகப்பனாக உறவுகளின் மீது அவன் கொண்டிருந்த பேரன்பு நிஜம். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவனது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீள முடியவில்லை. உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறான். மற்றெல்லோரையும் விட அவன் எங்கள் மீது கொண்ட அன்பு பெரிது.


என்பதின் வயதுகளில், இவன் பேரு ராமசுப்பு.. என்றும், இது விஜய் என்றும் தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினான். அதன் பின் இயக்குநர் ராம், இயக்குநர் விஜய் என மாறினார்கள். அண்ணனின் நண்பன் எனக்கும் அண்ணன் என்கிற விதிப்படி அன்று முதல் எனக்கும் அண்ணனாகவே தொடர்கிறார்கள். எனவே உங்களது சந்தேகங்களுக்கோ, யூகங்களுக்கே, புனைக்கதைகளுக்கோ எங்களில் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.


அவன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன். அவனது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்னும் வெளியாக காத்திருக்கின்றன. தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக தரமணியைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான். இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவன் இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.


சுஜாதாவின் நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன் என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன.


மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.



அள்ளித்தர அன்புடன்


நா.இரமேஷ்குமார்


இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in