Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாளை காஷ்மோரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

16 ஆக, 2016 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Kashmora-first-look-to-be-relase-tomorrow

ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜோக்கர்' படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சற்று பயத்துடன்தான் அந்தப் படத்தை வெளியிட்டனர். இந்தப் படம் பெரிதாக ஓடாது என்ற நினைப்பில் பப்ளிசிட்டி விஷயத்தில் கூட அடக்கியே வாசித்தனர். ஆனால் அவர்களின் எண்ணத்துக்கு மாறாக, லாபத்தைக் கொட்டக்கூடிய வசூலையும், மிகச்சிறந்த பெயரையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது ஜோக்கர்.


ஜோக்கர் வெற்றியடைந்த உற்சாகத்தில் அடுத்த தயாரிப்பான 'காஷ்மோரா' படத்தை வெளியிடும் திட்டத்தை வகுக்க ஆரம்பித்தவிட்டனராம். கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை வரும் தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


இப்படம் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். ஒட்டுமொத்த படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கிராபிக்ஸ் பணிக்கு மட்டுமே 5 கோடி செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில், காஷ்மோரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை நள்ளிரவு... அதாவது 18ஆம் தேதி அதிகாலை 00.01 மணிக்கு வெளியிடவிருக்கின்றனர். இந்த தகவலை நடிகர் கார்த்தியும் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவும் அறிவித்துள்ளனர். இதன்பிறகு, விரைவில் டீஸர் மற்றும் பாடல்களை வெளியிட உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in