‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'அம்புலி 3டி' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷனம் ஷெட்டி, பெங்களூர் பொண்ணு. மாயை, விலாசம், கதம் கதம், கலைவேந்தன் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்து விட்டாலும் ஷனம் ஷெட்டிச்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை.
இவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'தகடு'. அஜய், பிரபா என்ற புதுமுகங்கள் ஹீரோவாக நடிக்கிறார்கள், மற்றும் ராஜ்கபூர், சபீதா ஆனந்த், நெல்லை சிவா, பிரியங்கா சுக்லா, ஹாசிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.கார்த்திகேன் ஒளிப்பதிவு செய்கிறார், சார்லஸ் மெர்வின் இசை அமைத்துள்ளார். எம்.தங்கதுரை இயக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 19-ம் தேதி ரிலீஸாகிறது.
“சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் கையில் ஒரு ரகசிய தகடு கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு அதன் வழிகாட்டுதலின்படி அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் விநோதமான பிரச்னைகள்தான் கதை. அந்த தகடு சொல்லும் ரகசியம் என்ன? அதை இவர்கள் கண்டுபிடித்தார்களா? என்பதே திரைக்கதை என்கிறார் இயக்குனர் தங்கதுரை. இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக நடித்துள்ள ஷனம் ஷெட்டிக்கு இந்தப் படம் திருப்பம் தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.