Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விவாகரத்து நடிகைகள் பட்டியலில் இணைகிறார் திவ்யா உன்னி..?

16 ஆக, 2016 - 08:45 IST
எழுத்தின் அளவு:
divya-unni-to-divorce-Sudhir-Sekharan-Menon

பிரிக்க முடியாதது எது என கேட்டால் மலையாள நடிகைகளும், விவாகரத்தும் என்று லேட்டஸ்ட்டாக பதில் சொல்லும் அளவுக்கு வருடத்திற்கு ஒருவராவது விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த ஒரு மாத காலமாக நடிகை அமலாபால் - விஜய் திருமண முறிவு செய்தி மீடியாவுக்கு பரபரப்பான தீனி போட்டது. அது சற்றே ஓய்ந்துள்ள வேளையில், அடுத்ததாக இன்னொரு மலையாள நடிகையான திவ்யா உன்னியும் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோர இருக்கிறார் என்கிற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.


பத்து வருடங்களுக்கு முன்பு தமிழில் சில படங்களில் நடித்த மலையாள நடிகை திவ்யா உன்னியை ஞாபகம் இருக்கிறது தானே..? கார்த்திக்குடன் கண்ணன் வருவான், அர்ஜீனின் வேதம், பார்த்திபனுடன் சபாஷ் ஆகிய படங்களில் நடித்த திவ்யா உன்னி மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் சமயத்திலேயே அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதீர் என்பவரை கடந்த 2002-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். இவர்களுக்கு அர்ஜூன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உண்டு. திருமணத்திற்கு பின் நடிப்பில் ஆர்வம் காட்டாத திவ்யா உன்னி இரண்டு வருடங்களுக்கு முன்பு முஷாபர் என்கிற படத்தில் மட்டும் கெஸ்ட் ரோலில் நடித்தார்.


இந்த நிலையில் தான், சமீபத்தில் ஒரு மலையாள பத்திரிகை ஒன்றில் மனம் திறந்து பேசிய திவ்யா உன்னி தனது திருமண வாழ்க்கை ஒரு பயங்கரமான நிகழ்வு என்பது போலவும், அதிலிருந்து கூடிய விரைவில் வெளியேறப் போவதாகவும் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதே நேரம், மலையாள சினிமாவில் மம்தா மோகன்தாஸ், காவ்யா மாதவன், மஞ்சு வாரியார் என விவாகரத்து பெற்ற நடிகைகளின் பாணியில் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்கவும் திட்டமிட்டு உள்ளாராம் திவ்யா உன்னி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in