Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆக.,26-ல் மலையாள ஜனதா கேரேஜ் பாடல்கள் வெளியீடு

15 ஆக, 2016 - 15:21 IST
எழுத்தின் அளவு:
Janatha-Garage-Malayalam-audio-launch-on-Aug-26

தமிழில் விஜய்யுடன் ஜில்லா, கன்னடத்தில் புனித்ராஜ் குமாருடன் மைத்திரி போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அடுத்ததாக தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து ஜனதா கேரேஜ் படத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 2ல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு ஆகஸ்ட் 12ல் ஐதராபாத்தில் நடந்தது.


தெலுங்கில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிவந்த 15 மணி நேரத்திற்குள் ஜனதா கேரேஜ் படத்தின் டிரைலர் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. இதுவரை 2 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் ஜனதா கேரேஜ் படத்தின் பாடல்கள் மலையாளத்திலும் வெளிவரவுள்ளது.


மோகன்லால் நடித்திருப்பதால் கேரளாவில் இப்படத்திற்கு பெரிய ஓப்பனிங்க் கிடைக்கும் இதனை மேலும் விளம்பரப்படுத்த மலையாள பாடல்கள் வெளியீட்டு விழாவையும் சிறப்பாக செய்ய இயக்குனர் கொரட்டாலா சிவா முடிவெடுத்துள்ளார். அதன்படி கொச்சியில் ஆகஸ்ட் 26ல் நடைபெறும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் மோகன்லால் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in