அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
1973ம் ஆண்டு வெளிந்த படம் 'சூரியகாந்தி'. முத்துராமன், ஜெயலலிதா, சோ, மனோரமா, காத்தாடி ராமமூர்த்தி, எம்.எம்,ஆர்.வாசு ஆகியோர் நடித்திருந்தார்கள். டி.எஸ்.பிரசாகம் கதை, திரைக்கதை வசனம் எழுதியிருந்தார், முக்தா சீனிவாசன் இயக்கி, தயாரித்திருந்தார். கணவனை விட மனைவி அதிகமாக சம்பாதிப்பதால் ஏற்படும் குடும்ப பிரச்சினைகளை மையமாக கொண்டு உருவான படம். இந்தக் கதை இந்தக் காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பதால் அதனை டிஜிட்டல் மயமாக்கி மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
43 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் அப்போது வெள்ளி விழா கொண்டாடியது, பெரியார் ராமசாமி ஜெயலலிதாவுக்கு கேடயம் பரிசு வழங்கினார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் கஜலட்சுமி நவீன தொழில்நுட்பத்துடன் மறு உருவாக்கம் செய்து வருகிறார். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளில் சூரியகாந்தி மீண்டும் திரைக்கு வரும் என்று தெரிகிறது.