தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் விரின்சி வர்மா இயக்கத்தில் நானி நடிக்கும் ‛மஜ்னு' படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அண்மையில் வெளிவந்த மஜ்னு படத்தின் டீசர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஜென்டில்மேன் எனும் திரில்லர் படத்திற்கு பின்னர் நானி காதல் கதையம்சம் கொண்ட மஜ்னு படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் நடிகர் ராஜ் தருண் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மஜ்னு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் ராஜ் தருண் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனந்தி ஆர்ட் கிரியேசன்ஸ் தயாரிக்கும் மஜ்னு படத்திற்கு இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைக்கின்றார். விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.