'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
லண்டன் நடிகையான எமிஜாக்சன் அறிமுகமானது என்னவோ தமிழ் சினிமாவில்தான் என்றாலும், கெளதம்மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கான ஏக் திவானா தா படத்தில் நடித்த பிறகு அவரது கவனம் இந்தி சினிமா பக்கம் திரும்பிவிட்டது. ஸ்ருதிஹாசன் பாணியில் இந்திய சினிமா நடிகையாக முடிவெடுத்து, தொடர்ந்து சில இந்தி படங்களிலும் நடித்து வந்தவர், தற்போது, சோகைல் கான் இயக்கும் பிரீக்கி படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் அப்படம் வெளியாகிறது.
அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகி வரும் 2.ஓ படத்திலும் நாயகியாக நடித்து வரும் எமிஜாக்சன், பிரபுதேவா-தமன்னா நடித்துள்ள தேவி படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஆக, தற்போது ஒரு இந்தி படம், மூன்று மொழிகளில் உருவாகும் 2 படங்கள் என நடித்து வரும் எம்ஜாக்சன், அடுத்தபடியாக ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கிறார். ஆனபோதும் , இதேவேகத்தில் இந்தியில் அழுத்தமாக கால்பதித்து விட வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டுள்ளதாம். அதனால் ஏற்கனவே மும்பையில் வீடு பார்த்து குடியேறிவிட்ட எமிஜாக்சன், இப்போது அங்குள்ள சில முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறாராம்.
மேலும், கிளாமர் விசயத்தில் எமி, பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு தாராளம் காட்டக்கூடியவர் என்பதால், அவர் பாலிவுட் படங்களுக்காக தீவிரம் காட்டுவதைப்பார்த்து அங்குள்ள மெகா நடிகைகள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.