‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
'இஞ்சி இடுப்பழகி' படத்தில் ஏன் தான் நடித்தோமோ என அனுஷ்கா இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்தப் படத்திற்காக குண்டான பெண்ணாக மாறிய அனுஷ்கா சுமார் ஒரு வருட காலம் ஆன பிறகும் இன்னும் ஸ்லிம்மாக மாற முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார். 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அனுஷ்கா சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகளை அதற்காகவே இன்னும் படமாக்காமல் இருந்து வருகிறாராம் இயக்குனர் ராஜமௌலி.
இயற்கையாகவே உடல் எடையைக் குறைத்து விடுகிறேன் என அனுஷ்கா சொன்னதால் காத்துக் கொண்டிருந்தார் ராஜமௌலி. ஆனால், இத்தனை மாதங்களாகியும் அனுஷ்காவால் உடல் எடையை முழுமையாகக் குறைக்க முடியவில்லை. அதனால், கடுப்பான ராஜமௌலி 'லிபோசக்ஷன்' அறுவை சிகிச்சை செய்தாவது உடல் எடையைக் குறையுங்கள் என கேட்டுக் கொண்டாராம். ஆனால், பக்க விளைவுகளுக்குப் பயந்து கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மறுத்துவிட்டாராம் அனுஷ்கா. இதுதான் டோலிவுட்டின் முக்கிய பரபரப்பில் இன்றும் இருந்து வருகிறது.
திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாத ஒரு சூழ்நிலையில்தான் ராஜமௌலி அப்படி சொன்னார் என்கிறார்கள். அனுஷ்கா அடுத்தடுத்து சரித்திரப் படங்களில் நடிப்பதால் இன்னும் ஒரு மாதத்திற்குள் எப்படியாவது உடல் எடையைக் குறைத்துவிடுகிறேன் என ராஜமௌலியிடம் 'டைம்' கேட்டுள்ளாராம். அவரவர்க்கு ஆயிரம் கவலை... அனுஷ்காவிற்கு இப்போது உடல் எடைதான் அதிகக் கவலை...!