தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் என்ன காரணத்தினாலோ சசிகுமாரை தாடி வைத்த ராமராஜன் என்று ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். சசிகுமார் அணிகிற கலர்கலரான உடைகள் காரணமாகவோ என்னவோ, ராமராஜனுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். இந்நிலையில், அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் தற்போது 'கிடாரி' என்ற படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நிகிலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
'ராஜதந்திரம்' படத்தில் காமெடியனாக நடித்தவரும், ஆரம்பத்தில் தனியார் பண்பலை வானொலியில் ஆர்.ஜே.வாக இருந்தவருமாகன 'தர்புக்கா' சிவா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இவர் இசையில் மோகன் ராஜ் எழுதி, அனிதா, வேல்முருகன் பாடியுள்ள 'தலைகாலு புரியலையே..' என்று துவங்கும் பாடலை வருகிற 15-ஆம் தேதி காலை 10 மணி அளவில் சமூகவலைத்தளத்தில் வெளியிடவிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.