இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியத் திரையுலகின் கனவுக் கன்னியாக பல வருடங்கள் இருந்த '16 வயதினிலே' மயிலு, ஸ்ரீதேவிக்கு இன்று 54வது பிறந்த நாள். ஸ்ரீதேவியின் நடிப்புக்கும், அழகிற்கும், ஏன் அவரது கொஞ்சும் குரலுக்கும் கூட பல ரசிகர்கள் இருந்த காலம் உண்டு. தமிழ்த் திரையுலகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சுமார் 10 வருட காலம் பல படங்களில் சிறுமியாக நடித்து, குமரியான பின்னர் 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே ஒரு சவாலான கதாபாத்திரம். முதல் மூன்று படங்கள் பெரிய வெற்றிகளை அவருக்குத் தனிப்பட்டுத் தரவில்லை என்றாலும் ‛16 வயதினிலே' மயிலு கதாபாத்திரம் இன்று வரை மக்கள் மனதில் நிரந்தரமாக அமர்ந்துவிட்டது.
அடுத்த சில வருடங்களில் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், என்டிஆர், சிரஞ்சீவி, மோகன்பாபு, நாகார்ஜுனா, வெங்கடேஷ் என முன்னணி ஹீரோக்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹிந்தியில் 'ஜுலி' படத்தில் இளம் கதாபாத்திரத்தில் 1975லேயே நடித்திருந்தாலும் 'மூன்றாம் பிறை' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'சத்மா' படம் வெளிவந்த 1983ம் ஆண்டுக்குப் பிறகு ஹிந்தித் திரையுலகில் விறுவிறுவென உயர்ந்தார் ஸ்ரீதேவி.
திருமணம் நடந்து இரண்டு மகள்களைப் பெற்ற பின் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். கடந்த வருடம் வெளிவந்த 'புலி' படத்தின் மூலம் தமிழிலும் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார். தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்திலும் ஸ்ரீதேவியின் இடத்தை வேறு யாராலும் என்றும் நிரப்பவே முடியாது.