ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‛எம்எஸ் தோனி. தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனிடையே தோனி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. சுமார் 35 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் மகேந்திர சிங் தோனி டிரைலரை வெளியிட்டார். உடன் சுசாந்த் சிங்கும் பங்கேற்றார்.
அப்போது சுசாந்த் சிங்கிடம் இந்தாண்டு நீங்கள் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்ததே என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த சுசாந்த், ‛‛அப்படியா... எங்கிருக்கிறார் அந்த பெண், அவருக்காக நான் காத்திருக்கிறேன்'' என்று திருமண வதந்திக்கு புற்றுப்புள்ளி வைத்தார்.
சுசாந்த் சிங்கின் இந்த அறிவிப்பு மூலம் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவே முன்னுரிமை கொடுத்திருப்பதும், திருமணத்திற்கு இன்னும் சிலகாலம் ஆகும் என்பது புரிகிறது.