பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் இயக்குனரானவர் பேரரசு. தொடர்ந்து சிவ காசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி என ஊர்களின் பெயர்களை வைத்து பல படங்களை இயக்கினார் பேரரசு. கடைசியாக சன் ஆப் அலெக்சாண்டர் என்றொரு படத்தை மலையாளத்தில் இயக்கினார். மேலும், தான் இயக்கிய அனைத்து படங்களிலுமே நடித்துள்ள பேரரசு, மற்ற இயக்குனர்களின் சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் அவர் ஒரு படத்தை இயக்கும் கதை விவாதத்தில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். ஆனால் விஜயகாந்த், விஜய், அஜீத், அர்ஜூன், பரத் என முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வந்த பேரரசு. இந்த புதிய படத்தை புதுமுகங்கள் வைத்துதான் இயக்குகிறார். அதில் தானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்கிறார்கள்.