விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஸ்வரூபம் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகை பூஜா குமார் அப்படத்திற்கு பின்னர் கமலஹாசன் நடித்த, உத்தமவில்லன் படத்தில் நடித்தார். தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் பூஜா குமார் டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குனர் பிரவீன் இயக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகர் ராஜசேகர் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்க பூஜா குமார் ஒப்பந்தமாகியுள்ளார். அதிரடியான ஆக்ஷன் படத்தில் ராஜசேகர் போலீஸாக நடிக்கின்றார். ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.