'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் எமி ஜாக்சனும் ஒருவர். இவர் லண்டனில் இருந்து வந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயக்குநர் மோஹித் சூரி, தற்போது ஹாப் கேர்ள்பிரண்ட் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் அர்ஜூன் கபூர், ஷ்ரத்தா கபூர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். எமி ஜாக்சனும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருந்தார், ஆனால் தற்போது அவர் நடிக்கவில்லை.
இதைப்பற்றி எமியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில்... "நான் ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன், ஆனால் முடியவில்லை. ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தில் எனக்கு சிறப்பு வேடம் கொடுப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் இப்படத்திற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன், ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டேன். அதனால் தான் ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தில் நடிக்கவில்லை" என்றார்.
எமி ஜாக்சன் , தற்போது இயக்குநர் சோஹைல் கான் இயக்கத்தில் பிரிக்கி அலி என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம், இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.