ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் முதல்வாரத்தில் தனுஷின் தொடரி மற்றும் விக்ரமின் இருமுகன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் தொடரி. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைந்துவிட்டது. தணிக்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. தணிக்கை முடிந்ததும் தொடரி படத்தை விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினங்களான செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட தீர்மானித்துள்ளனர்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் தயாராகி வரும் இருமுகன் படமும் இதே தினத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டன. இப்படத்தையும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினங்களான செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஷிபுதமீன்.
கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள படம் வெளியானது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட 10 எண்றதுக்குள்ள படம் படு தோல்வியடைந்தது. எனவே கடந்த வருட தோல்வியை மனதில் கொண்டு, இருமுகன் படத்தை விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியிட வேண்டாம் என்று விக்ரம் முட்டுக்கட்டை போடுகிறாராம். அந்த தேதியை விட்டால் நல்ல தேதி கிடைக்காது என்று சொல்லும் தயாரிப்பாளர் ஷிபு, விக்ரம் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் செப்டம்பர் 1 அன்றே இருமுகன் படத்தை வெளியிட உள்ளார்.