டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷாகித் கபூர், சைப் அலிகான், கங்கனா ரணாவத் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‛ரங்கூன்'. விஷால் பரத்வாஜ் இயக்கும் இப்படம், பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. ரங்கூன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அடுத்தாண்டு பிப்ரவரி 24ம் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறது.
ரங்கூன் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன் என சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஷாகித் கபூர். அப்போது அவர் பேசுகையில், ‛‛ரங்கூன் படத்திற்கு உண்மையிலேயே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் கதையும் சிறப்பான ஒன்று. எல்லாவற்றுக்கும் மேலாக அதிக பொருட்ச்செலவில் படம் உருவாகி வருவதால் ஒவ்வொரு காட்சியையும், இயக்குநர் பார்த்து பார்த்து உருவாக்கி வருகிறார். அதனால் தான், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது'' என்று கூறியுள்ளார்.