அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்க பலரும் முயற்சித்தார்கள். ஆனால் ரஜினி அதற்கு அனுமதிக்கவில்லை. சிலர் சுயசரிதை எழுதச் சொன்னார்கள். அதற்கும் ரஜினி உடன்படவில்லை. "சுயசரிதை எழுதினால் உண்மையை எழுத வேண்டும். சில உண்மைகள் பலரை காயப்படுத்தும் அதனால் வேண்டாம்" என்றார். ஆனால் தற்போது தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தனது மகள்களுக்கு அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து சவுந்தர்யா கூறியிருப்பதாவது: சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு அப்பா வந்தது மிகப்பெரிய சாதனை இதற்கு பின்னால் அவரது கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருக்கிறது. அது இக்கால இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அப்பாவின் வரலாற்றை சினிமாவாக எடுக்கும் முயற்சி எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. அக்கா ஐஸ்வர்யா அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார். அவர் எழுதி முடித்தவுடன் அதை அப்பாவிடம் காட்டி அவரது ஒப்புதலுக்கு பிறகு அது சினிமாவாகலாம். அப்பாவை பற்றி மற்றவர்களை விட எங்களுக்குத்தான் அதிகம் தெரியும் என்பதால் நாங்களே இதனைச் செய்ய முடிவு செய்திருக்கிறோம். என்கிறார் சவுந்தர்யா.
இப்போதைய நிலவரப்படி திரைக்கதை வசனத்தை ஐஸ்வர்யா எழுத, சவுந்தர்யா இயக்கலாம் என்று தெரிகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் இயக்குனர் பொறுப்பு மட்டும் வேறொருவரிடம் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.