Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா மகன் உறவைச் சொல்லும் திரி

11 ஆக, 2016 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Thiri-to-speak-about-Father---Son-relation

தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வினும், சுப்பிரமணியபுரம் ஸ்வாதியும் தமிழில் இணைந்து நடிக்கும் படம் திரி. புதுமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்குகிறார். ஜெயபிரகாஷ், அனுபமா குமார், செண்ட்ராயன், டேனியல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசை அமைக்கிறார், சதுரங்க வேட்டை ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.


இது தந்தை மகன் உறவின் உன்னதத்தை சொல்லும் படம் என்கிறார் இயக்குனர் அசோக் அமிர்தராஜ். அவர் மேலும் கூறியதாவது: தமிழ் சினிமாவில் தந்தை - மகன் உறவை மையமாக வைத்து வந்த படங்கள் குறைவு என்றாலும், அவை யாவும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த திரைப்படங்கள் ஆகும். தற்போது அந்த வரிசையில் தயாராகியுள்ள படம் திரி.


நாம் எவ்வளவு தான் வாழ்க்கையில் வெற்றிகளை குவித்தாலும், நம்முடைய தாய் - தந்தை அதை பார்க்க இல்லையென்றால் அந்த வெற்றிகள் யாவும் முழுமை பெறாது. நாம் ஒவ்வொருவரும் நம் நிஜ வாழ்க்கையில் சந்தித்த, சந்தித்து கொண்டிருக்கும், சந்திக்க போகும் முக்கியமான பிரச்சனையை அணுகியிருக்கும் படம், பெரும்பாலான காட்சிகளை இயற்கையான சூழ்நிலைகளில் தான் படமாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் எல்லா ரசிகர்களையும் வியப்படைய செய்யும்" என்கிறார் இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in