ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புதுவை மாநிலத்தின் கவர்னரான கிரண்பேடி, அம்மாநிலத்தை தூய்மையான மாநிலமாகவும், ஒழுக்கமான மாநிலமாகவும் மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதோடு, நடிகர் ரஜினிகாந்த் புதுவை மாநிலத்தின் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டால் தனது முயற்சி எளிதில் நடை முறைக்கு வந்துவிடும் என்று ரஜினிக்கு அழைப்பு விடுத்தார். அதோடு, புதுவை மாநிலத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு கபாலி பட டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவித்து, சொன்னது போலவே இலவசமாக கபாலி பட டிக்கெட்டையும் வழங்கினார் கிரண்பேடி.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரஜினி சார்பில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கிரண்பேடியை புதுவையில் சந்தித்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களது சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பினை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் கிரண்பேடி. ஆனபோதும், ரஜினி புதுவை மாநிலத்தின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்படுவது பற்றிய தகவல் எதுவும் அவர் வெளியிடவில்லை.