விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
மலையாள 'தட்டத்தின் மறையத்து' படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் படம் - 'மீண்டும் ஒரு காதல் கதை'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த இஷா தல்வரே தமிழிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இப்படத்துக்கு பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் படம் வெளியாவதாக விளம்பரம் செய்யப்பட்டநிலையில் கடைசி நேரத்தில் படம் தியேட்டருக்கு வராமல் போனது. கடைசியாக, மீண்டும் ஒரு காதல் கதை' ஆகஸ்ட் 5 அன்று வெளியாகவிருந்தது.
கலைப்புலி தாணு இந்தப் படத்தை வெளியிடுவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. அதனால் ஆகஸ்ட் 5 அன்று மீண்டும் ஒரு காதல் கதை வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைக்கும் படம் வெளியாகவில்லை. லேட்டஸ்ட் தகவலாக ஆகஸ்ட் 26 அன்று மீண்டும் ஒரு காதல் கதை படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த தடவையும் வெளியாகாமல் போனால் சிம்பு படங்களின் சாதனையை இந்தப்படம் மிஞ்சிவிடும்.