ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாசர் மகன் லுத்புதீன் சைவம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இது என்ன மாயம் படத்தில் நடித்தார். தற்போது பறந்து செல்லவா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் விரைவில் வெளிவர உள்ளது. "இந்த படத்தை பார்த்து விட்டு அப்பா எனக்கு பாஸ் மார்க் போடணும்" என்கிறார் லுத்புதீன்.
அவர் மேலும் கூறியதாவது: சினிமா இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் விஜய் அங்கிள் என்னை சைவம் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்திவிட்டார். சைவம் படத்தில் நான் கமிட் ஆனது அப்பாவுக்குத் தெரியாது. தெரிந்ததும் சண்டை போட்டார். "முறையாக நடிப்பு கத்துக்காம நடிக்க போனது தப்பு"ன்னு சொன்னார். சரிப்பா இனிமே கத்துக்கிட்டு நடிக்கிறேன்னு சொல்லி மும்பை, பாண்டிச்சேரின்னு அலைஞ்சு நடிப்பு கத்துகிட்டு வந்து... இது என்ன மாயம் படத்தில் நடிச்சேன். ஆனால் இரண்டு படத்திலும் என் நடிப்பை பார்த்துவிட்டு அப்பா பாஸ்மார்க்க போடலை.
இப்போது பறந்து செல்ல வா ரிலீசாகப்போகுது. முந்தைய இரண்டு படங்கள்ல சின்ன ரோல். ஆனால் இதுல ஹீரோ. அப்பாகிட்ட எப்டியாவது பாஸ் மார்க் வாங்கிடணும்னு கடுமையா உழைச்சிருக்கேன். படம் வெளிவந்ததும் "நடிப்புல பாசாகிட்டேடா மகனே"ன்னு அவர் சொல்லணும் இதுதான் இப்போதைக்கு எனது ஆசை. என்கிறார் லுத்புதீன்.