அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
எக்ஸ்பிரஸ் ராஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் சர்வானந்த் நடிக்கவிருக்கும் சதமானம் பவதி படத்தில் பிரேமம் நாயகி அனுபமா பரமேஸ்வரன் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று(ஆகஸ்ட் 9) வெளிவந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் படத்தின் தலைப்பை உறுதி செய்து வெளிவந்திருக்கும் அப்போஸ்டரில் இத்திரைப்படம் 2017 பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சதீஸ் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைக்கின்றார். ஒளிப்பதிவாளராக சமீர் ரெட்டி ஒப்பந்தமாகியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கத்திலான்டோன்டு, பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சதர்கனி போன்ற பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் தற்போது சர்வானந்தும் இணைந்துள்ளார்.