'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாபி சிம்ஹா தயாரித்து நடித்து வரும் படம் வல்லவனுக்கும் வல்லவன். ஷிவதா, பூஜா தேவரியா, ஆனந்தராஜ், கருணாகரன், நெப்போலியன் நடிக்கிறார்கள். ரகு தீக்ஷித் இசை அமைக்கிறார் பத்மேஸ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் தேசிங்கு என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு 11 கெட்அப்கள் இருக்கிறது. போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி, போராளி, தாதா என கெட்அப் போட்டு நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் விஜய் தேசிங்கு கூறியதாவது:
மனிதர்களின் வாழ்க்கையை தீர்மாணிப்பது பணம்தான். எல்லோரும் பணத்தை நோக்கி ஓடுகிறார்கள். படத்தின் ஹீரோ பணம் இல்லாமல் வாழவே முடியாது என்ற உறுதியாக நம்புகிறவன். அவன் பல கெட்அப்கள் போட்டு ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான். இதற்காக பாபி சிம்ஹா 11 கெட்அப் வரை போட்டிருக்கிறார். அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் ஒன்று சேரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. பாபி சிம்ஹாவுக்கு எந்த வேடமும் பொருத்தமாக இருக்திம் என்பதை இந்த படம் உறுதி செய்யும். அவரது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். ரீ எண்ட்ரியாகும் நெப்போலியன் அடுத்த ரவுண்டை இந்தப் படத்திலிருந்து ஆரம்பிப்பார். என்கிறார் இயக்குனர் விஜய் தேசிங்கு.