'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நடிகை கரீனா கபூர் கான், ரியா கபூரின் வீரி தி வெட்டிங் என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் வேலைகள் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. தற்போது இப்படத்தில் கரீனா காபூர் கான், கர்ப்பமாக இருக்கும் பெண்ணாக நடிக்க உள்ளாராம். இந்த தகவலை சோனம் கபூர் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஆமாம். இப்படத்தில் கரீனா கர்ப்பமாக இருக்கும் பெண்ணாக நடிக்கிறார். ஒருவேளை இப்போது கரீனா கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், கர்ப்பமாக இருப்பது போன்ற தோற்றத்தை நாங்கள் செயற்கையாக அவருக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால் அவர் கர்ப்பமாக இருப்பது பலவகைகளிலும் கடவுள் எங்கள் படத்திற்கு அளித்த ஆசீர்வாதம். எங்கள் படத்திற்காகவே கடவுள் அவரை கர்ப்பமாக்கி உள்ளார் என்றார். வீரி தி வெட்டிங் படத்தில் சோனம் கபூர், ஸ்வர பாஸ்கர், கரீனா கபூர் கான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.