தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம்-ஜீவா நடித்த டேவிட் படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இந்தியில் சில படங்களை இயக்கியுள்ள இவர், விஜயசேதுபதி நடித்த பீட்சா படத்தை இந்தியில் தயாரித்தார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. முக்கியமாக, அந்த படத்தில் கார்த்திக் நடித்த வேடம் பெரிய அளவில் பேசப்பட்டதால் அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்து வந்த பிஜாய் நம்பியார், ராஞ் ஜனா, ஷமிதாப் ஆகிய இந்தி படங்களில் நடித்த தனுஷ் இந்தி ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் என்பதால் அவரை அணுகினார். ஆனால் அவர் தற்போதைய நிலவரப்படி பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் கைவிரித்து விட்டார்.
அதனால், இந்தி ரசிகர்களுக்கு பரிட்சயமான வேறு தமிழ் நடிகர்கள் யார் என்று ஆலோசித்து வந்த அவர், இப்போது பாய்ஸ் சித்தார்த்தை செலக்ட் செய்திருக்கிறார். தமிழ் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு படங்களில் நடித்த சித்தார்த், அங்கிருந்து அப்படியே இந்திக்கு சென்று, அமீர்கான், மாதவன் நடித்த ராங் டி பசன்டி மற்றும் ஸ்டிரிக்கர் உள்பட சில படங்களில் நடித்தார். அதனால் இந்தி ரசிகர்களுக்கு தெரிந்த முகமாகி விட்டார் சித்தார்த். அதனால், அக்னி நட்சத்திரம் படத்தில் கார்த்திக் நடித்த வேடத்தில் தனுசுக்குப்பதிலாக சித்தார்த்தை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் பிஜாய் நம்பியார். தற்போது தமிழில் நடித்து வரும் சைத்தான் கா பச்சாய் படப்பிடிப்பு முடிந்த பிறகு அக்னி நட்சத்திரம் இந்தி ரீமேக்கில் நடிக்கிறாராம் சித்தார்த்.