வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, விமல் என்று நடித்து வந்த நந்திதா, உப்புக்கருவாடு படத்தில் டவுட் செந்திலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு மீண்டும் தனது முதல் பட நாயகனான அட்டகத்தி தினேசுக்கு ஜோடியாக உள்குத்து, எஸ்.ஜே.சூர்யாவுடன் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் நடித்தாலும், காத்திருப்போர் பட்டியல் -என்ற படத்தில் சென்னையில் ஒருநாள் படத்தில் நடித்த சச்சினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சச்சின் தமிழில் பெரிதாக அறிமுகமில்லாத மலையாள நடிகர் என்பதால் அதை காரணம் காட்டி ரூ. 20 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடித்துள்ளார் நந்திதா.
இந்தநிலையில், அடுத்தபடியாக தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் அவர் எதிர்பார்த்தபடி கமிட்டாகாத நிலையில், புதுமுக ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவும் தயாராகி விட்டார் நந்திதா. அதனால் சில டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ள அவர், பிரபலமில்லாத நடிகர்களின் படங்கள் என்கிறபோது தனக்கான சம்பளத்தை அதிகமாக தர வேண்டும் என்றொரு கண்டிசனையும் தனது சார்பில் வைத்திருக்கிறார். அவர் சொன்ன சம்பளத்தைக்கேட்ட சில தயாரிப்பாளர்களுக்கு தலைசுற்றி விட, இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார்கள்.