மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜெயா, ஜீ தமிழ், விஜய் உள்பட பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் வைசாலி. இவர் சமீபத்தில் வெளியான ராஜா மந்திரி என்ற படத்தில் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடித்திருந்தார். கதைப்படி எதிர்வீட்டு பெண்ணான வைசாலியை காதலிக்கும் காளி வெங்கட், எதிர்த்த வீட்டு காளிபிளவரே -என்று அவரைப்பார்த்து பாட்டெல்லாம் பாடுவார். அதையடுத்து அவர் வைசாலியிடம் காதலை சொல்லப்போகும்போது பிரச்சினை வெடித்து அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
அந்த வகையில், முதல் படத்திலேயே அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார் வைசாலி. ஆனபோதும், அதன்பிறகு வைசாலிக்கு புதிய படங்கள் எதுவும் கமிட்டாகவில்லையாம். இருப்பினும், சிலர் அவரது உடம்பு குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டியதை அடுத்து, இப்போது கடுமையான டயட்ஸ் கடைபிடித்து ஓரளவு ஸ்லிம்மாகி விட்டார் வைசாலி. இதையடுத்து தனது சினிமா நண்பர் களை சந்தித்து படம் விசயமாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.