அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
தமிழில் தற்போது 'பொட்டு' என்கிற படத்தில் பேயாக நடித்து வருகிறார் இனியா. அதேசமயம் மலையாளத்தில் சின்னச்சின்ன வேடங்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். அந்தவகையில் தற்போது வெள்ளக்கடுவா' என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் மிக முக்கியமானவராக நடிக்கிறார். இந்தப்படத்தில் இவருக்கு கிராமத்து பெண் வேடம்.. கதாநாயகன் பிஜூமேனன் தனது வாழ்க்கையில் சந்திக்கும் மூன்று பெண்களில் ஒருவராக நடிக்கிறார் இனியா.
மற்ற இரண்டு பெண்களும் அவரை கைவிட்டு போய்விட, அவருடன் கடைசிவரை உறுதுணையாக கூடவே இருக்கும் கேரக்டராம் இனியாவுக்கு. இந்தப்படத்தில் இனியாவின் பெயர் என்ன தெரியுமா..? லவ்லி.. எல்லோரிடமும் அன்பானவராக இருக்கவேண்டும் என அவர் தந்தை வைத்த பெயராம் இது.. ஆச்சர்யமாக இருமுகன் படத்தில் திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கும் விக்ரமின் பெயரும் 'லவ்' என்பதுதான். இன்னொரு பக்கம் தமிழ்சினிமா குணச்சித்திர நடிகையான விஜி சந்திரசேகரின் மகள் நடிக்க களம் இறங்கி இருக்கிறாரே அவர் பெயர் லவ்லின்.. ஆக கேரக்டர்களுக்கு 'லவ்' என பெயர் வைப்பது புதுசாகத்தான் இருக்கிறது.