மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலாவின் 'பரதேசி' படத்தில் எப்போது நடிக்க ஒப்பந்தமாநோரா அப்போதிருந்தே தன்ஷிகா மீது ஒரு எதிர்பார்ப்பு முத்திரை விழுந்துவிட்டது.. அதற்கேற்ற மாதிரி கடந்த வருடம் ரஜினியுடன் கபாலி' படத்தில் இணைந்து நடிக்கிறார் தன்ஷிகா என்பதே அவரது மைலேஜை கூட்ட ஆரம்பித்துவிட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே 'கபாலி'யில் ரஜினியின் மகளாக அற்புதமாக நடித்து கைதட்டல் பெற்றார் தன்ஷிகா. இன்ட சூட்டோடு சூடாக் மலையாள திரையுலகிலும் நுழையும் வாய்ப்பு அவரை தேடிவந்தது..
அதுவும் இளம் நாயகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க.. கூடவே பிரபல இயக்குனர் பிரதாப் போத்தன் டைரக்சன், 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் அஞ்சலி மேனன் ஸ்கிரிப்ட் என பலமான கூட்டணி இதில் இருந்ததால் மலையாளத்தில் தான் அடியெடுத்து வைக்கும் முதல் படமே இவ்வளவு வெயிட்டான படமாக இருக்கிறதே என சந்தோஷத்தில் திளைத்தார். ஆனால், பாவம் யார் கண்பட்டதோ தெரியவில்லை, பிரதாப் போத்தனுக்கும் அஞ்சலி மேனனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் இப்போது கைவிடப்பட்டுள்ளது. தனது முதல் மலையாள பட கனவு இந்தவிதமாக கலைந்துபோனதால் 'வட போச்சே' என வருத்தத்தில் இருக்கிறார் தன்ஷிகா.