பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கபாலி' படத்தின் டீசர் யு டியூபில் வெளியான நாளிலிருந்தே அது பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. மிக விரைவில் மில்லியன், கோடி பார்வைகளைப் பெற்ற இந்தியத் திரைப்பட டீசராக மிகப் பெரும் சாதனையைப் புரிந்தது. அதே போல 'கபாலி' டீசர் அதை 'லைக்' செய்வதிலும் தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
உலக அளவில் இதுவரை “Star Wars: The Force Awakens Official Teaser #2” யு டியூபில் 4,63,571 லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அதை சற்று முன்னர் 'கபாலி' பட டீசர் முறியடித்துள்ளது. காலை 11.50 மணியளவில் கபாலி டீசர் 4,63,575 லைக்குகளைப் பெற்று முதலிடத்தை பெற்றது. இதன் மூலம் உலக அளவில் 'கபாலி' பட டீசர், யு டியூப் லைக்குகள் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒரு தமிழ்ப் படத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை இது.
அதேசமயம் 'ஸ்டார் வார்ஸ்' டீசரை இதுவரை 7 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். ஆனால், 'கபாலி' டீசரை 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்த்திருந்தாலும் இவ்வளவு லைக்குகள் வந்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
கபாலி தமிழ் டீசரை இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். தெலுங்கு டீசரை 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், ஹிந்தி டீசரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் கண்டு ரசித்துள்ளனர்.