நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோ பட்டியலில் சேர்ந்த விஜய் ஆண்டனி, சைத்தான், எமன் என்ற இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். இதில் சைத்தான் படத்தை அவரே தயாரித்து நடிக்கிறார். எமன் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அந்த வகையில், பிச்சைக்காரன் வெற்றி காரணமாக சிறிய பட்ஜெட் படமாக உருவான சைத்தான் படத்தின் பட்ஜெட் பின்னர் உயர்த்தப்பட்டு பிரமாண்ட படமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும், சைத்தான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, எமன் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு விஜய் ஆண்டனி சென்று விட்டதால், அதுவரை நடத்தப்பட்ட படத்தின் எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது எமன் படப்பிடிப்பை முடித்து விட்டு வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பி விட்ட விஜய் ஆண்டனி, சைத்தான் படத்தின் பேட்ஜ் ஒர்க் பணிகளில் நடிக்க வேண்டியிருந்ததால், கடந்த சில தினங்களாக சென்னையிலுள்ள பின்னி மில்லில் இரவு பகலாக நடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சில தினங்களில் சைத்தான் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்கிறார்கள்.