தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்கள் சில வருடங்களிலேயே பெரிய திரையில் புகழ் பெற்று வருகிறார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலக்கிய சந்தானம் வெள்ளித்திரைக்கு வந்து நம்பர் ஒன் காமெடியனாகி, பின்னர் ஹீரோவாகிவிட்டார். அவரது வழியில் சிவகார்த்திகேயனும் 3 படத்தில் காமெடியனாக தலை காட்டி, பின்னர் ஹீரோவாகி தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.
இவர்களைத் தொடர்ந்து ம.கா.பா. ஆனந்தும் ஹீரோவாகி சில படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் ரோபோ சங்கரும் காமெடியனாக பல படங்களில் நடித்து வருகிறார். சிங்கப்பூர் தீபன் என்பவரும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் தற்போதைய தொகுப்பாளராக ஈரோடு மகேஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் அண்மையில் வெளியாகின.
தற்போது மற்றொரு விஜய் டிவி பிரபலமான அமுதவாணன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஜூலியும் நாலு பேரும் என்ற படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். ஜூலியாக ஒரு நாய் நடிக்கிறது. இதே படத்தில் விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் நடிக்கும் ஜார்ஜ் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சதீஷ் என்பவர் இயக்குகிறார்.