'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
நடிகைகளின் மகள்கள் நடிக்க வருவது அப்படி ஒன்றும் ஆச்சர்யப்படுகிற விஷயமில்லை தான். நடிக்க வராமல் வேறு துறைக்கு சென்றால் தான் ஆச்சர்யம். இப்படியொரு வியாக்கியானம் செய்ய ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே? இருக்கிறது. முன்னாள் கதாநாயகி நடிகையான சரிதாவின் தங்கை மகள் விரைவில் நடிக்க வருகிறார்!
சரிதாவின் தங்கையான விஜி 1981 ஆம் ஆண்டில் தில்லுமுல்லு படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். ஆனால் அவர் நடிகையாக பிரகாசிக்கவில்லை. எனவே சந்திரசேகர் என்ற விமானியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன் பிறகு ஏறக்குறைய 12 வருடங்களுக்குப் பிறகு அதாவது 1993 ஆம் ஆண்டு கிழக்குச்சீமையிலே படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு சினிமாவிலும், சின்னத்திரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் விஜி!
சரிதா, விஜியை தொடர்ந்து விஜியின் மகள் லவ்லின் விரைவில் தமிழ் சினிமாவிபடமொன்றில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். சிறுவயது முதலே இவருக்கு நடிப்பின் மீதிருக்கும் ஆர்வத்தால் மும்பையிலுள்ள அனுபம்கேர் சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ளார் லவ்லின்!
தற்போது துபாயில் மனோ தத்துவம் படிப்பை இறுதி ஆண்டு படித்து வரும் லவ்லின் சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் அண்மையில் போடோஷூட் பண்ணி இருக்கிறார். அது மட்டுமல்ல தனக்கு அறிமுகமான ஒரு பி.ஆர்.ஓ.விடம் தன் மகளின் ஆல்பத்தைக் கொடுத்து வாய்ப்பு தேடச் சொல்லி இருக்கிறார் விஜி.