தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே மீடியாக்களில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன்னைத்தேடி வந்த நடிப்பு வாய்ப்புகளை தவிர்த்து விட்டு, அமெரிக்கா சென்று நடிப்பு சம்பந்தமான படிப்பை தொடர்ந்து வருகிறார் ஜான்வி. அந்த வகையில், மகளுக்கு நடிப்பு பற்றிய பயிற்சியை கொடுத்த பிறகு களத்தில் இறக்கிவிட திட்டமிட்டிருக்கிறார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மும்பை வரும்போதெல்லாம் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் ஜாலியாக சுற்றித்திரியும் ஜான்வி, சமீபத்தில் ஒரு பார்ட்டியில் அவருடன் கலந்து கொண்டாராம். அப்போது காதலருடன் இணைந்து நடனமாடிய ஜான்வி, ஒருகட்டத்தில் அவருடன் லிப் டூ லிப் முத்தம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.