Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துபாயில் கடலுக்கு நடுவில் பங்களா வாங்கிய ஐஸ்வர்யாராய்

02 ஆக, 2016 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Aishwaryarai-bought-bungalow-in-Dubai

சராசரி மக்களுக்கு சொந்த வீடு ஒரு வாழ்நாள் கனவு. வசதி படைத்தவர்களுக்கு போர்ட் கிளப் ஏரியாவில் பங்களா வாங்குவது கனவு. இன்னும் வசதியானவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பார்ம் ஹவுஸ் கட்டுவது கனவு. அதுபோல பிரபல நடிகர்களுக்கு துபாய் கடலுக்கு நடுவில் பங்களா வாங்குவது கனவு.


துபாயில் கடலை மேடாக்கி ஈச்ச மரத்தின் வடிவில் ஒரு நகரை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு வீடு வாங்கி குடியிருந்தால் பூமியிலேயே சொர்க்கத்தை அனுபவிக்கலாம் என்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி, ஸ்ரீதேவி, ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோருக்கு அங்கு எற்கெனவே பங்களா உள்ளது. இப்போது ஐஸ்வர்யாராயும் அங்கு ஒரு பங்களாவை வாங்கி உள்ளார்.


பிரமாண்ட நீச்சல்குளம், சுற்றிலும் ஈச்ச மரம். மினி தியேட்டர், பெரிய உடற்பயிற்சிக்கூடம், தியானகூடம், 9 படுக்கை அறைகள், ஒரு மீட்டிங்ஹால், ஒரு வரவேற்பு ஹால் கணினிமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வசதி இத்தனை வசதிகளும் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 54 கோடி ரூபாய். இது ஐஸ்வர்யாராயின் ஒரு வருட வருமானம். ஏற்கெனவே கணவருடன் தனிக்குடித்தனத்தை ஐஸ்வர்யா வற்புறுத்தி வரும் நிலையில் அவரின் இந்த தனி வீடு குடும்பத்துக்குள் லேசான புகைச்சலையும் கிளப்பி இருப்பதாகச் சொல்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அமிதாப்பச்சனிடம் வாய்ப்பு கேட்க சுவர் ஏறி குதித்த வாலிபர் கைதுஅமிதாப்பச்சனிடம் வாய்ப்பு கேட்க ... சூப்பர் உமன் ரோலில் நடிக்க ஆசைப்படும் ஜாக்குலின் சூப்பர் உமன் ரோலில் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
03 ஆக, 2016 - 10:30 Report Abuse
Rajendra Bupathi சரி அங்க போயி இவங்க புதுசா என்ன பண்ண போராங்க.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
02 ஆக, 2016 - 14:59 Report Abuse
Endrum Indian இதை ஆண்டு முழுவதும் ஆண்டு அனுபவிக்கப்போவது அங்கு வேலை செய்யும் வேலைக்காரர்கள் தான். ஐஸ்வர்யா குடும்பம் மிக மிக அதிகம் என்று பார்த்தால் ஆண்டிற்கு 2, 3 முறை செல்வார்களா?
Rate this:
Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
02 ஆக, 2016 - 12:49 Report Abuse
Vaidhyanathan Sankar koonthal ulla seemaattikal alli mudiyalaam. matravarkal perumoochchuthan vida mudiyum.
Rate this:
Tamil - Trichy,இந்தியா
02 ஆக, 2016 - 11:43 Report Abuse
Tamil இது வொரு செயற்கை தீவு.... அவ்வளவுதான். அப்படி இருக்க கடலுக்கு நடுவில் என்று வொரு டைட்டில் தேவையா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in