விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
என்னை அறிந்தால், தெறி, மீகாமன், கதகளி, நானும் ரெளடிதான் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆத்மா. இதில் என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் மோதியபடி நடித்தபோது அவரது ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளான ஆத்மா, அதன்பிறகு நானும் ரெடிளதான் படத்தில் காமெடி கலந்த வில்லனாகவும், கதகளியில் மிரட்டல் வில்லனாக நடித்தார். அதையடுத்து இப்போது சில தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழில் விக்னேஷ் நடித்த அவன் அவள் படத்தை இயக்கிய மிர்னாலி இயக்கி வரும் மோர் மிளகா என்ற படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் ஆத்மா. தீவிரவாதம் சம்பந்தப்பட்ட ஒரு அதிரடியான கதையில் உருவாகும் இந்த படத்தில் கிடா பூசாரி மகுடி படத்தில் நாயகனாக நடித்த தமிழ் நாயகனாக நடிக்கிறார். முதல் படத்தில் கிராமத்து நாயகனாக நடித்த தமிழ் இந்த படத்தில் நகரத்து இளைஞனாக நடித்துள்ளார். மோர் மிளகா படத்தின் படப்பிடிப்பு தற்போது 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.