ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் மகேஷ் பாபு பிரம்மோற்சவம் படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கும் வாஸ்கோடகாமா படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். ஜூலை 29ல் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் மகேஷ் பாபு இன்று(ஆகஸ்ட் 1) கலந்து கொண்டார்.
இப்படத்திற்காக மகேஷ் பாபு தாடி வளர்ப்பதாகக் கூறப்பட்டது. இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட மகேஷ் பாபுவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. க்ளீன் ஷேவ் செய்து இளமையான தோற்றத்துடன் காணப்படும் மகேஷ் பாபுவின் அப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக பகிரப்பட்டு வருகின்றது. இந்திய நீதித்துறையை மையபப்டுத்திய இப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார். ரூ 90 கோடி செலவில் என்.வி பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.