Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விழித்திரு படத்துக்கு விமோசனம்

01 ஆக, 2016 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Vizhithiru-movie-to-the-screens-soon

'அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இயக்கத்தில் உருவாதன இரண்டாவது படம் 'விழித்திரு'. கிருஷ்ணா, விதார்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா ஃபெர்ணான்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன், தெலுங்கில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்தவரும் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான நாகபாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மீரா கதிரவனும் அவரது நண்பர்களும் இணைந்து இப்படத்தைத் தயாரித்தனர்.


பாதி படம் வளர்ந்த நிலையில் நண்பர்கள் திடீரென்று கழன்று கொள்ள, அதனால் பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டு விழித்திரு படம் நின்றுபோனது இதற்கிடையில் கிருஷ்ணா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததும் விழித்திரு படத்துக்கு பாதகமாக மாறியது. படத்தை முடித்து வெளியிட இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டதால் பல முன்னணி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விழித்திரு படத்தை அண்டர்டேக் பண்ண யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் ஒருவழியாக விழித்திரு படத்துக்கு விமோசனம் கிடைத்துள்ளது.


படத்தை முடித்து வெளியிடுவதற்கு தேவையான பணத்தை முதலீடு செய்ய ஒருவர் முன்வந்ததை அடுத்து விழித்திரு பட வேலைகள் பரபரப்படைந்து உள்ளன.விரைவில் படத்தை வெளியிட உள்ளார் மீரா கதிரவன். ஒரு இரவில் சென்னையில் நடப்பது மாதிரி 'விழித்திரு' படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.


விஜய டி.ராஜேந்தர், சுப்பிரமணிய நந்தி மற்றும் எழுத்தாளர் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு அறிமுக இசை அமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார். விஜய டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன், சி.சத்யா, அல்ஃபோன்ஸ் என 7 இசை அமைப்பாளர்கள் 6 பாடல்களை பாடியிருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவில் முதல் முயற்சி என்கிறார்கள்.


Advertisement
அஜித் 57 வெளிநாட்டுப்படத்தின் தழுவலா?அஜித் 57 வெளிநாட்டுப்படத்தின் தழுவலா? தீவிரவாதியாக நடிக்கும் கதகளி வில்லன் ஆத்மா! தீவிரவாதியாக நடிக்கும் கதகளி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in