தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'கட்டழகி' என்ற சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமான மும்பை மாடல் சிருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி அழகால் தொடர்ந்து நடித்து வருகிறார். யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2 உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.
தற்போது அச்சமின்றி, ஒரு நொடியில், களைக்கூத்து, முப்பரிமாணம், பொட்டு, தர்மதுரை என ஒரே நேரத்தில் 6 படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் தர்மதுரையில் மட்டும் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். மருத்துவ கல்லூரி மாணவி வேடம். இது தவிர இப்போது தெலுங்கிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் கதிர்வர்மாவின் இணை இயக்குனராக பணியாற்றிய தேஜஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து தெலுங்கிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே.