இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இசை அமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. 2000மாவது ஆண்டில் 'டபுள்ஸ்' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். ஏய், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சிவகாசி, ஆழ்வார் உள்பட இதுவரை 97 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது அவர் 'திருநாள்' படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இது அவருக்கு 98வது படம். நட்டி நட்ராஜ் நடிக்கும் 'போங்கு' 99 வது படம். ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படம் 'பிரியமுடன் ப்ரியா'. 16 ஆண்டுகளில் செஞ்சுரி அடித்திருக்கிறார்.
தனது தந்தை பாணியில் கானா பாடல்களாலும், குத்துப் பாடல்களாலும் தனித்து அறியப்பட்டார். சிறு பட்ஜெட் படங்களுக்கு ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தார். 100 வது படம் நெருங்கும் நேரத்தில் சில உறுதியான முடிவுகளை எடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா என்கிற தனது பெயரை திருநாள் படத்திலிருந்து ஸ்ரீ என்று சுருக்கி வைத்துக் கொள்கிறார். இனி காலத்தை கடந்து நிற்கும் மெலடி பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார். ரீ ரிக்கார்டிங்கில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.