தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை பூஜா ஹெக்டே, மொகஞ்சோ தரோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாகிறது. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பூஜாவிடம், மொகஞ்சோ தரோ படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, முத்தமிடுவது போன்றவைகள் தவறானவையாக நீங்கள் நினைத்தாலும், திரையில் அவைகள் அழகாக வர வேண்டும் என நினைக்கிறீர்கள். சினிமாக்களில் வரும் சிறந்த முத்தக்காட்சிகளில் ஒன்றாக மொகஞ்சோ தரோ படமும் ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். முத்தம் என்பது எனது நடிப்பு பணியில் ஒரு அங்கம். முத்தக்காட்சியில் நடிப்பதற்கு நான் பயப்படுவதில்லை. ஏனெனில் நாங்கள் நல்ல நண்பர்கள். அதனை முத்தக்காட்சியாக நாங்கள் பார்க்கவில்லை. படத்தில் எங்களின் கேரக்டர்களின் வேலையை செய்கிறோம் என்று தான் நினைத்தோம் என கூறினார்.