இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
'கபாலி' திரைப்படம் கடந்த 22ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 320 கோடி ரூபாய்க்கும் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டதால் அங்குள்ள மலேசிய மக்களும் படத்தை அவர்களது தாய் மொழியான மலாய் மொழியில் பார்த்து ரசிப்பதற்காக படத்தை மலாய் மொழியில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தார்கள். அதன் முன்னோட்டமாக படத்தின் டீசரை மலாய் மொழியில் டப் செய்து வெளியிட்டனர். அதற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
மலேசியாவிலிருந்து டப்பிங் பேசும் கலைஞர்கள் சென்னைக்கு வந்து படத்திற்கான மலாய் மொழி டப்பிங்கைப் பேசினார்கள். மலாய் மொழியில் படம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக 29ம் தேதி மலேசியா முழுவதும் வெளியானது. அங்குள்ள மலாய் மக்களும் படத்தைப் பார்த்து ரசித்து வருவதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மலாய் மொழி வெளியீட்டிற்காக அவர்கள் பல சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.
தமிழ், மலாய் மொழி பேசும் தமிழ் மக்கள் உட்பட பலரும் படத்தை வெகுவாக ரசித்து வருகிறார்களாம். தமிழில் உள்ள பல வசனங்களின் தாக்கம் குறையாமல் 95 சதவீத அளவிற்கு அப்படியே மலாய் மொழியில் அற்புதமான டப்பிங் செய்துள்ளார்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். அதே போல தமிழில் இடம் பெற்ற பாடல்களையும் அதன் அர்த்தமும், சுவையும் குறையாமல் மலாய் மொழியில் இடம் பெறச் செய்துள்ளதையும் அவர்கள் பாராட்டுகிறார்கள். ஒரு தமிழ்ப் படம் மலாய் மொழியில் டப்பிங் செய்வது இதுவே முதல் முறை. இந்த புதிய சாதனையை 'கபாலி' படம் படைத்துள்ளதன் மூலம் இனி பல தமிழ்ப் படங்கள் மலாய் மொழியில் டப்பிங் ஆவதற்கு முன்னுதாரணமாக ஆகியுள்ளது.