ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிச்சைக்காரன் படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளியாகயிருக்கும் படம் சைத்தான். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக மலையாள நடிகை அருந்ததி நாயர் நடித்துள்ளார். இப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், நேற்று மாலை சைத்தான் படத்தின் புதிய போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், விஜய் ஆண்டனியும், ஒரு நரியும் நேருக்கு நேர் முறைத்துக்கொண்டு நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.
மேலும், விஜய் ஆண்டனி பாணியில் சீரியசான கதையில் உருவாகியிருக்கும் இந்த சைத்தான் படத்தின் முதல் பாதியில், அவர் அருந்ததி நாயரை துரத்தி துரத்தி காதலிப்பது போன்று கதை செல்ல, இரண்டாம் பாதியில் அவர் திரு மணமாகி தம்பதிகளாகி விடுவார்களாம். ஆனால் அதையடுத்து குடும்பத்திற்குள் வெடிக்கும் பிரச்சினைதான் படமாம். அந்த வகையில், ஒருகட்டத்தில் சைக்கோவாகி விடுவாராம் விஜய் ஆண்டனி. பின்னர் அவர் செய்யும் பிரச்சினைகள்தான் இந்த சைத்தான் படமாம்.
அதோடு, முதலில் தமிழக ரசிகர்களை மட்டுமே கருத்தில் கொண்டு கதை உருவான நிலையில், பிச்சைக்காரன் படம் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானதை அடுத்து தெலுங்கு ரசிகர்களையும் கருத்தில் கொண்டு கதையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும், பிச்சைக்காரனை மிஞ்சும் பிரமாண்ட காட்சிகள் சைத்தானில் அதிகமாக உள்ளதாம்.