‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்தில் வயதான சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை அணுகியபோது தடாலடியாக மறுத்து விட்டார். ஆனால் சிவாஜி கேர்ள் ஸ்ரேயா பின்னர் நடித்தார். இந்நிலையில், அதே படத்தில் சிம்பு நடிக் கும் மேலும் இரண்டு வேடங்களுக்கு எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என் கிற பரிசீலனை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நயன்தாரா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
ஆனால், நயன்தாரா மூன்று ஹீரோயினி கதைகளில் நடிக்க மாட்டார் என்பதால் அவரது பெயரை பரிசீலனை செய்ததோடு நிறுத்தி விட்டனர். ஆனால் போகன் படத்திற்கு பிறகு படமே இல்லாமல் இருக்கும் ஹன்சிகா ஒத்துக்கொள்வார் என்பதால் அவரிடம் பேச முடிவெடுத்திருந்தனர். ஆனால், சிம்பு முன்னாள் காதலர் என்பதால், அவருடன் நடிக்க விரும்பாத ஹன்சிகா, டிரிபிள் ஏ படத்தில சிம்புவுடன் ஹன்சிகா நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே உடனடியாக நான் நடிக்கவில்லை என்று மறுப்பு செய்தி வெளியிட்டு அவர்களை பேச்சுவார்த் தைக்கே வரவிடாமல் செய்து விட்டார்.
இந்நிலையில், தற்போது ரஜினி முருகன், ரெமோ படங்களை அடுத்து விஜய்யின் எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷிடம் தற்போது பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அவர் சிம்புவுடன் நடிக்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.