ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமான சாய் பல்லவி, மடோனா செபஸ்டி யன், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய மூன்று நடிகைகளில் மடோனா விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தவர், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து பிரேமம் படத்தின் இன்னொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் தனுஷ் நடித்துள்ள கொடி படத்தில் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படத்தில் முதலில் ஷாலினியின் தங்கை ஷாம்லிதான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகிக்கொள்ளவே அனுபமா கமிட்டாகி நடித்தார்.
மேலும், இந்த படத்தில் தனுஷ்-திரிஷாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்றாலும், இளவட்ட நாயகியாக நடித்துள்ள அனுபமாவின் கேரக்டருக்கும் அதிகப்படியான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில், அவரது ஓப்பனிங் காட்சி, காரில் வந்து சாலையோர கடைகளை இடித்து தள்ளுவது போன்ற பில்டப்புடன் படமாக்கப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தின் இளவட்ட தனுசுக்கு ஜோடியாக நடித்த காட்சிகளில் துறுதுறு பெண்ணாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் அனுபமா பரமேஸ்வரன். அதனால் இந்த ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் அவர் எளிதாக ஒட்டிக்கொள்வார் என்கிறார்கள்.