டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வெங்கட் பிரபுவின் சென்னை-28 படத்தில் ஜெய், மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடித்தவர் நிதின் சத்யா. அதன்பிறகு தோழா, பந்தயம் உள்பட சில படங்களில் நாயகனாக நடித்தார். அதையடுத்து ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காததால் கேரக்டர் நடிகராகி விட்டார் நிதின். அதோடு, சில படங்களில் காமெடி யனாகவும் நடித்தார். அவரது ஹீரோ நடிப்பை விட காமெடியன் நடிப்பே டைரக்டர்களை கவர்ந்ததை அடுத்து, சமீபத்தில் வெளியான பாண்டியோட கலாட்டா தாங்கல -என்ற படத்தில் காமெடி நாயகனாக நடித்தார் நிதின் சத்யா.
அதையடுத்து, இப்போது தாதா -என்ற பெயரில் ஒரு காமெடி படத்தில் அவர் நடித்து வருகிறார். அவருடன் நாசர், மனோபாலா உள்பட பலரும் காமெடி வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தாதா கெட்டப்பில் நடிக்கும் நிதின் சத்யா, தாதா வேசம் போட்டுக்கொண்டு திரிவதும், பிரச்சினை என்கிறபோது எஸ்கேப்பாகி விடுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் படமாக் கப்பட்டு வருகிறதாம். அதனால், இந்த தாதா தனது கேரியரில் திருப்புமுனை படமாக அமையும் எனறு எதிர்பார்க்கிறாராம் நிதின்சத்யா.