‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இதுவரை விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்த கதாநாயகிகளை அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் காண முடியவில்லை. அதனால் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் நடிக்க கமிட்டானபோது, அப்பட நாயகியான சாத்னா டைட்டஸையும் இதுவே தமிழில் உனக்கு கடைசி படமாக இருக்கும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். ஆனால் அவரோ, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதோடு ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்து கொண்ட சாத்னா டைட்டஸ், தற்போது தமிழில் எய்தவன் உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல் பிச்சைக்காரனில் நடித்து முடித்ததும் தெலுங்கிலும் ஒரு படத்தில் கமிட்டானார். அந்த வகையில், பிச்சைக்காரன் படத்தில் நடிக்க 2 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய சாத்னாவுக்கு தெலுங்கு படத்தில் நடிக்க 6 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளார்கள். அதோடு, அந்த படத்தின் போஸ்ட் புரொடக் சன்ஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில், பிச்சைக்காரன் படம் தெலுங்கில் ஹிட்டடித்ததால் இப்போது சாத்னா டைட்டஸ் நடித்த முதல் தெலுங்கு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அங்கு அவர் பேசப்படும் நடிகையாகியிருக்கிறாராம். அதோடு, சில தெலுங்கு பட டைரக்டர்களும் அவரிடம் கதைகள் சொல்லி வருவதோடு, ஓரிரு படங்கள் கமிட்டாகும் நிலை இருக்கிறதாம். அதனால் ஐதராபாத்தில் நிரந்தரமாக முகாமிட்டிருக்கிறார் சாத்னா டைட்டஸ்.